’லியோ’-வில் இணைந்த புது வில்லன்- ’மாநகரம்’ கனெக்ட் வரும் போல...!!

லியோ படத்தில் வரிசையாக வில்லன் நடிகர்கள் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் மாநகரம், டாணாக்காரம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்த மதுசூதனன் ராவ் லியோ படத்தில் இணைந்துள்ளார்.
 
leo movie

 

விஜய் நடித்து வரும் லியோ படத்தில் ஏற்கனவே பல வில்லன்கள் நடித்து வரும் நிலையில், புதியதாக ஒரு வில்லன் நடிகர் படக்குழுவில் இணைந்துள்ளது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. ஏற்கனவே இந்த படத்தில் மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட வில்லன் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இயக்குநர் மிஷ்கின் ஏற்கனவே தான் வில்லன் கதாபாத்திரத்தில் லியோ படத்தில் நடிப்பதாக கூறிவிட்டார். அதனால் அவரையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

leo movie crew

இந்நிலையில் சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மாநகரம், கோலி சோடா, எதற்கு துணிந்தவன், டாணாகாரன் போன்ற் அபடங்களில் நடித்த மதுசூதனன் ராவ் லியோ படத்தில் இணைந்துள்ளார். நீண்டு வளர்ந்த தாடியில் மிகவும் மிரட்டலான தோற்றத்தில் அவர் உள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் படம் ‘மாநகரம்’. அந்த படத்தில் மதுசூதனன் ராவ் தான் முக்கியமான வில்லன். ஏற்கனவே லியோ படம் எல்.சி.யூ-க்குள் வந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் தாக்கம் லியோ படத்தின் திரைக்கதையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay

அந்த வரிசையில் மதுசூதனன் ராவும் இப்படத்துக்குள் வந்துள்ளதால், லியோவில் மாநகரம் படத்தின் தாக்கமும் உணரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கைதி படத்துக்கு முந்தைய பிளாஷ் பேக்கில் நடக்கும் கதை என லியோவின் திரைக்கதையை பலரும் கூறி வருகின்றனர். அதனால் இப்படத்துக்குள் கார்த்தியும் வருவதற்கு வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
 

From Around the web