அடுத்தது ரன்வீர் சிங்கா..? ராம் சரணா..? ஷங்கர் சொன்ன பதில் இதுதான்..!

 
ஷங்கர், இயக்குநர்

லைகா நிறுவனத்துடனான மோதல் ஒருபக்கம் தொடர்ந்து வரும் நிலையில், ராம் சரண் நடிப்பில் படத்தை இயக்கும் முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படத்திற்கான மீதமுள்ள காட்சிகளை ஷங்கர் முடித்துக் கொடுக்க வேண்டும், அதுவரை அவர் வேறு எந்த படத்தையும் இயக்கக்கூடாது என நீதிமன்றத்துக்கு சென்றது லைகா நிறுவனம்.

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருதரப்புக்குமிடையே சமரசம் பேச உத்தரவு விடுக்கப்பட்டது. ஆனால் லைகாவின் நடவடிக்கைக்கு சம்மதம் தெரிவிக்காமல் பாதியிலேயே ஷங்கர் தரப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியது.

ஆனால் ஷங்கர் தெலுங்கில் தயாராகும் ராம் சரண் படத்தை துவங்கும் முடிவில் உறுதியாக இருக்கிறாராம். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் விரைவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட பணிகளை துவங்க அவர் முடிவு செய்துள்ளார். அதற்குள் இந்தியன் 2 பட விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web