அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கும் ஆர்யா..!

 
ஆர்யா மற்றும் நலன் குமாரசாமி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் நலன் குமாரசாமி அடுத்து இயக்கும் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக் நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. டார்க் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படம் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதை தொடர்ந்து ‘காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கினார். இந்த படம் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதற்கு பிறகு ஆந்தலாஜி திரைப்படத்தை இயக்கினார் நலன் குமாரசாமி.

அந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார். அவருடன் ’அருவி’ அதிதி பாலன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் நலன் குமாரசாமி.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கற்பனை கலந்த திர்ல்லர் கதையமைப்பில் உருவாகும் படமாகும். கொரோனா பரவல் குறைந்த பின் இந்த படம் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. 

From Around the web