அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யாவுடன் கைக்கோர்க்கும் யாஷிகா ஆனந்த்..!
 

 
கடமையை செய்
மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘கடமையை செய்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் முத்தின கத்தரிகாய். இந்த படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் அடுத்து இயக்கவுள்ள படம் ‘கடமையை செய்’. இதில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.

காவல்துறை கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக மட்டுமில்லாமல் குறிப்பிடத்தக்க குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சிம்புவின் மாநாடு, பொம்மை, டான் உள்ளிட்ட படங்களில் முக்கியத்துவம் பெற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web