அடுத்த வார அப்டேட்..! சிந்தாமணியின் பிளானை கண்டுபிடித்த மீனா..!

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா ஏமாற்றப்பட்டு இருப்பதை தெரிந்து இருக்கிறார். மீனாவிடம் அவருடைய அம்மா அந்த மண்டபத்து காரரிடம் பேசுனியா பணம் தருவது பற்றி ஏதாவது சொன்னாரா? என்று கேட்க, இல்லை இதில் பெரிய சூழ்ச்சி நடந்து இருக்கிறது நாம ஒரு வேலை பண்ணி அந்த சிந்தாமணி தான் இந்த பிளான் போட்டது என்று கண்டுபிடித்துவிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து நாம தப்பிவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிறகு இதற்காக சீதாவின் குடும்பத்தினர் மீனாவிற்கு உதவி செய்ய முன் வருகிறார்கள். அதைத்தொடர்ந்து மீனா ஸ்ருதியை சந்தித்து நடந்த பிரச்சனைகளை சொல்கிறார். அப்போது ஸ்ருதி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு என்ன பண்ணனும் என்று கேட்க மீனா பிளான் போட்டு கொடுக்கிறார். அதனால் ஸ்ருதி தான் இனிமே வேற யாருடையாவது குரலில் பேசி சிந்தாமணி தான் இந்த பிளான் போட்டு மீனாவை சிக்க வைத்தது என்பதை ஒத்துக் கொள்ள வைப்பார் என்று தெரிகிறது.