பரிதாபமான நிலையில் வாலி, சிட்டிசன் பட தயாரிப்பாளர்.!!

நடிகர் அஜித்தை வைத்து பல்வேறு படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது திரையுலகில் பலரையும் கவலை அடையச் செய்துள்ளது.
 
ajith kumar

தமிழில் நடிகராக அறிமுகமான அஜித்துக்கு கமர்ஷியல் அடையாளத்தை பெற்று தந்த படங்கள் என்றால் சிட்டிசன், வாலி, ரெட் உள்ளிட்ட படங்கள் தான். இம்மூன்று படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் நிக் அர்ட்ஸ் சக்கரவர்த்தி. இவர் அதிகளவில் அஜித்தை வைத்து தான் படம் தயாரித்துள்ளார். அதை தொடர்ந்து சிம்பு படங்களையும் அவர் அதிகமாக தயாரித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு இவருடைய தயாரிப்பில் வெளியான படம் வரலாறு. அதை தொடர்ந்து காளை, ரேனிகுண்டா, 18 வயசு, வாலு உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இவை அனைத்தும் படுதோல்வி அடைந்தன. அதனால் சினிமாவை விட்டு எஸ்.எஸ். சக்கரவர்த்தி விலகிவிட்டார்.

இதையடுத்து 2022-ம் ஆண்டு விலங்கு என்கிற வெப் சிரீஸை தயாரித்தார். எனினும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால அவருடைய அடுத்தடுத்த அப்டேட்டுகள் என்ன என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்கரவர்த்திக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய சிகிச்சைகளை பெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சினிமா உலகில் பலரையும் கவலை அடையச் செய்துள்ளது. 

சில வாரங்களுக்கு முன்பு தான் அவருடைய தந்தை மரணம் அடைந்துள்ளார். அந்த துயரம் மறைவதற்குள் எஸ்.எஸ். சக்கரவர்த்திக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜித்தின் திரைவாழ்க்கைக்கு பெரும் அச்சாரம் போட்டவர் அவர் தான். ஆனால் அவருடைய பரிதாப நிலை பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.

From Around the web