நல்லா வடை சுடுறாங்கய்யா..GOAT வசூல் 126 கோடியாம் - ப்ளூ சட்டை செம கலாய்..!
விஜய் நடித்த லியோ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்திருந்தது. அதன்படி கிட்டத்தட்ட 148 கோடிகளை முதல் நாளிலேயே வசூலித்து சாதனை படைத்திருந்தது லியோ திரைப்படம்.
இதை தொடர்ந்து விஜயின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்குகின்றார் என்று தகவல்கள் வெளியானதில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்பட்டது. அதிலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார், பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றார்கள், மேலும் இதில் சிவகார்த்திகேயன், திரிஷா கேமியோ ரோலில் கலக்கி உள்ளார்கள் என்று பல சர்ப்ரைஸ் தகவல்களை உள்ளடக்கி இந்த திரைப்படம் வெளியானது.
எனினும் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க முடியவில்லை. அதாவது கோட் திரைப்படம் முதல் நாளில் 126.32 கோடிகளை வசூலித்துள்ளதாக அதிகாரவபூர்வமாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன், GOAT முதல்நாள் வசூல் 126 கோடியாம். நல்லா வடை சுடுறாங்கய்யா. நான் நம்ப மாட்டேன். என்று இப்படிக்கு.. ஜெயிலர் 530 கோடி.. என வடைகளை சுட்டுத்தள்ளிய... தர்பார் தனபால் டுவிட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அதாவது நடிகர்கள் போட்டி போட்டு தான் வசூல் விபரத்தை வெளியிடுவதாக தற்போது ரஜினிகாந்தை வம்பு இழுத்து சுட்டிக்காட்டி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.