சூப்பர் ஸ்டார் நடிகருடன் முதன்முறையாக ஜோடி சேரும் நித்யா மேனன்..!

 
நித்யா மேனன்

தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்ததால் அந்த வாய்ப்பு நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் ‘ஐய்யப்பனும் கோஷியும்’. இந்த படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் இந்த படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த படத்தில் தெலுங்கு படத்திற்கான ஷூட்டிங் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. ஹீரோவாக பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபாத்தி நடிக்கின்றனர். காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்னதாக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது அவர் வேறு படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகிவிட்டதால் அந்த வாய்ப்பு நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் மிரட்டலான வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். அதேபோல ராண டகுபாத்திக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web