மீண்டும் காதலில் விழுந்த நிவேதா..? மாப்பிள்ளை யாரு ? 

 
1

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கச்சியாகவும் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் நடித்த மை டியர் பூதம் சீரியல் தற்போது வரையில் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி தெலுங்கில் பிரபல நடிகரான நானியுடன் இணைந்து ஜென்டில்மேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல பெயரை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.

இந்த படத்திற்கு பிறகு இவர்களுடைய கெமிஸ்ட்ரி நல்லா இருக்குது. இவர்கள் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை மறுத்த நிவேதா, தாங்கள் நண்பர்கள் என்று கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து மலையாள நடிகர் ஒருவரை காதலிப்பதாக நிவேதா தாமஸ் சொல்லியதோடு, அவரை திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாம்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார் நிவேதா தாமஸ். அதாவது தனது எக்ஸ் தல பக்கத்தில் ''It's been a while..... but. Finally!" என குறிப்பிட்டு ஹார்ட் சிம்பில் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நிவேதா மீண்டும் காதலில் விழுந்துவிட்டார் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். மேலும் விரைவில் அவர் திருமண தேதியை அறிவிக்க வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் மாப்பிள்ளை யாரெனவும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.


 

From Around the web