பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்டேன் - ஓபன்னாக பேசிய நிவேதா பெத்துராஜ்..

 
1

2016 -ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இப்படத்தை தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நிவேதா பெத்துராஜ், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், எனக்கு பிளம் லிப்ஸ் வேண்டுமென ஆசைப்பட்டு என்னுடைய மருத்துவரிடம் போய் இன்ஜக்‌ஷன் போட முடியுமானு கேட்டேன்.

அதற்கு அவர், உன்ன கொன்னுடுவேன், உனக்கு இதுவே நல்ல இருக்கிறது என்று சொன்னார். ஆனால் பாலிவுட் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே முகத்தை சர்ஜரி செய்து மாற்றிக்கொள்கிறார்கள். என்னை பொறுத்தவரை அது நல்லதில்லை, நித்யா மேனன், சாய் பல்லவி போன்ற நடிகைகள் அவற்றையெல்லாம் செய்யாமலேயே அழகாக இருக்கிறார்கள் என்று நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.  

From Around the web