இன்று எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை.. இளையராஜா உருக்கம்..!

 
1

 இன்றைய தினம் இசைஞானியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் தனுஷும் இளையராஜாவின் பயோபிக் தொடர்பிலான போஸ்ட் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடும் இளையராஜா செய்தியாளர்களிடம் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், பிறந்த நாள் வாழ்த்துக்களை நீங்கள் தான் எனக்கு சொல்கின்றீர்களே தவிர, என்னுடைய மகளை நான் பறிகொடுத்த காரணத்தால் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று எனக்கு இல்லை. உங்களுக்காக தான் இந்த கொண்டாட்டம் எல்லாம் என்றார்.

 

அதாவது, இளையராஜாவின் மகளான பவதாரணி கடந்த வருடம் பித்தப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் இளையராஜாவின் குடும்பத்திற்கு பேரடியாக காணப்பட்டது. இவ்வாறான நிலையில் தான் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லையென இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

From Around the web