வியாபாரம் ஆகாத சமந்தா படம்..!!

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சகுந்தலம்’ திரைப்படத்துக்கான வியாரம் முறையாக துவங்கமால் இருப்பதால் விநியோகஸ்தர்கள் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
shakuntalam

தெலுங்கில் வெளியான ருத்ரமாதேவி படத்தை தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு குணசேகரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘சகுந்தலம்’. மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் காதலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. மேலும் ரசிகர்கள் சகுந்தலம் படத்தை 3டி-யில் பார்க்கலாம்.

இந்த படத்தின் உருவாக்கப் பணிகளின் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. கடந்த மார்ச் மாதமே இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பட ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து பல தடைகளை கடந்து ‘சகுந்தலம்’ திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளிவரவுள்ளது.

ஆனால் இதுவரை திரையரங்க உரிமையாளர்கள் யாரும் ‘சகுந்தலம்’ படத்தை வாங்குவதற்கு முன்வரவில்லையாம். விநியோகஸ்தர்கள் குறைந்த விலை கூறினாலும், அந்த படத்தை திரையரங்க உரிமையாளர்கள் யாரும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் சகுந்தலம் படக்குழு செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது சமந்தாவுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web