எந்த வீட்டில் தான் அப்பா, மகன் சண்டை இல்லை: மனம் திறந்த எஸ்.ஏ. சந்திரசேகர்..!

 
எஸ். ஏ. சந்திரசேகர்

நான் கடவுள் இல்லை பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யுடன் இருந்து வரும் பிரச்னை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மூத்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள படம் ‘நான் கடவுள் இல்லை’. சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் மகன் விஜய்க்கு பெயர் வைத்த காரணத்தை வேறொரு விழா மேடையில் பேசினேன். அதை இரண்டு நாட்களில் வேறு மாதிரி மாற்றி பேசுகிறார்கள். இப்படி ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை.

எந்த வீட்டில் தான் அப்பா, மகனிடையே சண்டை இல்லை. அதேபோன்று தான் விஜய் மற்றும் எனக்கும் இடையிலும் பிரச்னை உள்ளது. நாங்கள் கட்டிப்பித்துக் கொள்வோம் அப்புறம் சந்தோஷமாக சேர்ந்து கொள்வோம் என்று அவர் கூறினார். 

From Around the web