காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகைக்கு திருமணம்..!

 
சந்திரா லக்‌ஷ்மணன்
பிரபல சீரியல் நடிகை சந்திரா லக்ஷ்மணனுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. சக நடிகர் டோஷ் க்றிஸ்டியை அவர் மணக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் வெளியான 'மனசெல்லாம்', 'தில்லாலங்கடி' போன்ற படங்களில் நடித்தவர் சந்திரா லக்ஷ்மணன். தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'காதலிக்க நேரமில்லை' சீரியல் மிகவும் பிரபலமானது.

கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு திரையுலகை விட்டு சந்திரா விலகிவிட்டார்.  கடந்தாண்டு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். எதற்காக விலகினார், மீண்டும் அவர் எதற்காக வந்தார் என யாருக்கும் எதுவும் தெரியாது.

தாய் மொழி மலையாளத்தில் தயாராகி வரும்  'ஸ்வந்தம் சுஜாதா' என்கிற சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடித்துவரும் சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக சந்திரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், எங்கள் குடும்பத்தினரின் சம்மதத்தோடும், ஆசியோடும் ஒரு புதிய பயணத்தை நாங்கள் தொடங்குகிறோம். எங்களை ஆசீர்வதித்து உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை வைத்திருங்கள் என்று சந்திரா குறிப்பிட்டுள்ளார்.

From Around the web