விஜய்யும் இல்லை; சூர்யாவும் இல்லை- சுதா கொங்கரா இயக்கும் படத்தில் அஜித்..!!

 
விஜய்யும் இல்லை; சூர்யாவும் இல்லை- சுதா கொங்கரா இயக்கும் படத்தில் அஜித்..!!

சூரரைப் போற்று படத்துக்கு பிறகு விஜய்யுடன் கைக்கோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர் சுதா கொங்கரா அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா இரண்டாவது அலை காரணமாக இதனுடைய ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவிலேயே படக்குழுவினர் படப்பிடிப்பு பணிகளை தொடங்கவுள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கும் புதிய படத்திலே அஜித் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதை உறுதி செய்யும் விதமான செய்திகள் கோலிவுட்டில் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் இதுவாகவே உள்ளது.

இதற்கிடையில் வலிமை படத்துக்கு பிறகு சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் இந்த படம் தொடர்பான கதையை பேசி முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் மற்றும் சுதா கொங்கரா இருவரும் இந்த படம் தொடர்பாக இருமுறை சந்தித்து பேசியுள்ளார். வலிமை படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.
 

From Around the web