இணையத்தில் வைரலாகும் நூடுல்ஸ் பட ட்ரைலர்..! 

 
1

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான அடுத்த திரைப்படம் ’நூடுல்ஸ்’. இந்த படம் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஹரிஷ் உத்தமன் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் திரௌபதி படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார்.

மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகன் ஹரிஷ் உத்தமன், எதிர்பாராத விதமாக போலீசை அடித்து விட அதனால் அவரது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனை என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது.

உணர்ச்சிகரமான காட்சிகள், அதிரடியான போலீஸ் காட்சிகள் என டிரைலரில் இருக்கும் விறுவிறுப்பான காட்சிகளை பார்க்கும்போது படமும் நிச்சயம் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நூடுல்ஸ்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் நிச்சயம் இந்த படம் பார்ப்பவர்களை ஏமாற்றாது என்றும் இந்த படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தேன் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

From Around the web