ஒன்றல்ல... ரெண்டல்ல.. 36 வருடங்கள் கழித்து ரீ ரிலீசுக்கு தயாராகும் கமல் படம்..! 

 
1

கமல்ஹாசன், அமலா நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் எல் வைத்தியநாதன் இசையில் உருவான திரைப்படம் ’பேசும் படம்’. இந்த படம் ரூ.35 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்தது என்பதும், இந்த படம் வசனமே இல்லாமல் வெளிவந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை 36 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசனின் ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’பேசும் படம்’ திரைப்படமும் அதே போல் மிகச் சிறந்த வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

From Around the web