ஒன்றல்ல...இரண்டல்ல...700000 கொடுத்த பிக்பாஸ்..! பணத்தை எடுத்த முக்கிய போட்டியாளர்..!

 
1

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, இப்போது வரை இந்த வீட்டில் 7 பேர் உள்ளனர். அதில் 4 ஆண்கள் 3 பெண்கள் உள்ளார்கள்.இதில் இன்று காலை வந்த முதல் ப்ரோமோவில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்து வீட்டைவிட்டு வெளியேற நினைப்பவர்கள் செல்லலாம் என பிக்பாஸ் கூற யாரும் அந்த பணத்தை எடுக்கவில்லை.

இதனால் பிக்பாஸ் இப்போது போட்டியாளர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை கொடுத்து வெளியேற நினைப்பவர்கள் எடுத்துக் கொண்டு செல்லலாம் என கூறியுள்ளார்.

ஆனால் போட்டியாளர்கள் யாரும் அந்த பணத்தை எடுக்கவில்லை மாறாக போட்டியாளர் அமீர் மட்டும் பணத்தை கையில் எடுத்து பார்க்கிறார் என காட்டப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை பார்க்க மட்டும் தான் செய்தாரா இல்லை பணத்தை எடுத்து செல்வாரா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

இதோ அந்த ப்ரோமோ…


 


 

From Around the web