பிரபல உதவி இயக்குநர் மாரிமுத்து காலமானார்..! 

 
1

 வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் மாரிமுத்து. 30 வயதே ஆன மாரிமுத்து திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருப்புளியங்குடி ஊரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அளவுக்கதிகமான சிகரெட் பழக்கம் இருந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட உடனடியாக நெல்லை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அளவுக்கதிமான சிகரெட் பழக்கமே அவரது உயிரைப் பறித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web