இனி இவருக்கு பதில் இவர்... சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் சிறகடிக்க ஆசை நடிகை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் சீரியலில் இருந்து நடிகை ஒருவர் விலகி இருக்கிறார். இந்த சீரியலில் நடிகை வைஷ்ணவி நாயக் கீர்த்தி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு அம்மாவாக ராஜேஸ்வரி ஆக நடிகை சாந்தி வில்லியம்ஸ் நடித்து வந்தார். இவருக்கு பதிலாக தான் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகை அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இவர் இந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பிசினஸ் எதிரியாக சிந்தாமணி கேரக்டரில் நடித்து வரும் சுஜாதா தான் புதுவசந்தம் சீரியலில் சாந்தி வில்லியம்ஸ்க்கு பதிலாக ராஜேஸ்வரி கேரக்டரில் அறிமுகமாகி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போதுதான் மீனாவிற்கு சிந்தாமணி தன்னை பழிவாங்க தான் விஜயாவிடம் டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்திருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. அதைவிட விஜயா முன்பே சிந்தாமணியிடம் நான் என்னுடைய திறமைகளால் சாதித்து காட்டுவேன் என்று சவால் விட்டு இருக்கிறார். ஆனால் சிந்தாமணி விஜயாவிடம் உங்க மருமகளை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனால் விஜயாவின் உதவியோடு மீனாவை பழி வாங்குவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிந்தாமணி தொடங்குவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் புதுவசந்தம் சீரியலில் இவருடைய என்ட்ரியால் அந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.