இனி ஓ.டி.டி தான் சினிமா- மணிரத்னம் ஆரூடம்..!

 
மணிரத்னம்

ஓடிடி வேகமாக வளர்ந்துகொண்டுள்ளது. இனிமேல் அதுதான் சினிமாவுக்கான எதிர்காலம் என மூத்த இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இருவரும் தயாரித்துள்ள ஆந்தாலஜி படம் ‘நவரஸா’. ஒன்பது கதைகளை உள்ளடக்கிய இந்த படம் வரும் ஆகஸ்டு 6-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.

ஒவ்வொரு கதையையும் கவுதம் மேனன், அரவிந்த் சாமி, சர்ஜுன் கே.எம். வசந்த், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ப்ரியதர்ஷன், பிஜோய் நம்பியார், ரதீந்திரன் ஆர். பிரசாத் என ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

மனிதனின் ஒன்பது உணர்ச்சிகளை மையப்படுத்தி ஒவ்வொரு கதையும் இயக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், ரேவதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி, யோகி பாபு என முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மணிரத்னம் பிரபல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார் அப்போது பேசிய அவர், ஓடிடி இயக்குநர்களுக்கு பெரிய சாதகமான தளமாக இருக்கும். எல்லா கதைகளையும் சொல்ல ஓடிடி வழி வகுத்துள்ளது. இதனால் மாறுபட்ட கதைகள் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பொன்னியின் செல்வன் படத்திற்கு இன்னும் ஒரு ஷெட்யூல் பாக்கியுள்ளது. எனது கேரியரில் மிகவும் பிரமாண்டமான படமாக அது இருக்கும். சிறிய படங்கள், பெரிய படங்கள் என எதுவாக இருந்தாலும் கடிதன்ம் தன என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்தார்.
 

From Around the web