இனி சமந்தா நடிகை மட்டுமல்ல ஒரு தயாரிப்பாளரும் கூட..
Apr 29, 2024, 07:05 IST
நடிகை சமந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த Maa Inti - Bangaram என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதுவரை இல்லாத புதிய கெட்டப்பில் அவர் நடித்துள்ளதாக தெரிகின்றது.
குறித்த திரைப்படத்தை Tralala Moving Pictures என்ற நிறுவனம் தயாரித்து உள்ளதோடு, அந்த நிறுவனமும் நடிகை சமந்தா உருவாக்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் எனவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா நடிகையாக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் களம் இறங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.