இனி ஊழல் செய்தால் அவ்வளவு தான்... இந்தியன் தாத்தா இஸ் பேக்..!  

 
1

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் கடந்த 2019ஆம் ஆண்டு பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘இந்தியன் 2′.அடுத்தடுத்து பல இன்னல்களை சந்தித்த இப்படம் தற்போது தான் ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது .

ஏகபோக எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இந்தியன் படத்திற்கு இசை புயல் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார் .

பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படம் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஒவொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ இந்திய 2 படத்தின் ட்ரைலர்..

From Around the web