பாரதி கண்ணம்மா சீரியலின் புது கண்ணம்மா இவர் தான்..!!

 
1

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விரும்பி ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. டிஆர்பி லும் சரி  சுவாரசியதிலும் சரி தற்போது முன்னிலையில் இருப்பது இந்த சீரியல் தான். கண்ணம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ரோஷினி இந்த தொடர் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இவரின் இயற்பெயரை விட கண்ணம்மா என்கிற பெயர் தான் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. 

இந்நிலையில் கண்ணம்மாவாக நடித்த ரோஷ்னி ஹரிப்ரியன் தற்போது அந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்ற மாடல் தான் இனி கண்ணம்மாவாக நடிக்கிறார்.

மாடலிங் மூலம் மீடியாவில் அடியெடுத்து வைத்துள்ள வினுஷா தேவி, தமிழில் விரைவில வெளியாக உள்ள என்4 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வரவுள்ள பாரதி கண்ணம்மா எபிசோடு குறித்த ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்து. இந்த ப்ரமோவில் பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களும் வினுஷா தேவி நடிப்பில் ரீகிரியேட் செய்தது போல காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அதிருப்தியுடன் பேசி வருகின்றனர். இதற்கு அவர்கள் சீரியலை முடித்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். புது கண்ணம்மாவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.


 

From Around the web