கால்பந்து விளையாட்டில் இருக்கிற அரசியலை பேசும் ‘நம்பர் 6. வாத்தியார் கால் பந்தாட்ட குழு’டீசர் வெளியீடு!

 
1

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா ஆகிய படங்களை இயக்கியவர் செ.ஹரி உத்ரா. இவர், ‘நம்பர் 6. வாத்தியார் கால் பந்தாட்ட குழு’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

நுங்கம்பாக்கம் படத்தில் நடித்த ஐரா, அருவி படத்தில் நடித்த ஷரத் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். வினோத்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார், அலிமிர்ஸாக் இசை அமைக்கிறார். சேவார தீனா, ப்ரீத்தி சங்கர், உசா, செ.ஹரி உத்ரா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

கால்பந்து விளையாட்டில் நம் இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், அந்த விளையாட்டில் இருக்கிற அரசியலையும் பேசும் படம். படம் முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கும் கதையாக உருவாகிறது. நிஜமான கால்பந்து விளையாட்டு வீரர்கள் நடிக்கிறார்கள். மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 

From Around the web