உலக நாயகரே... நீங்களே இப்படி செய்யலாமா ? நெட்டிசன்கள் கிண்டல்..!  

 
1

பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளில் இருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை (ஜனவரி 14) பிரம்மாண்டமாக கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன் குறித்து விஜய் டிவி நட்சத்திரங்களான புகழ் மற்றும் குரேஷி  பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குரேஷி கமலஹாசனை போல் மிமிக்ரி செய்கிறார். அப்பொழுது புகழ் கேள்வி கேட்கிறார், அவர் கேட்கும் கேள்வி அனைத்திற்கும் மாயா மாயா என்று பெயர் பொருத்தி கமலஹாசன் குரலில் பதில் அளித்தார். ‘உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன?’ என்று அவர் கேட்க ’மாயாஜால்’ என கூறுகிறார். பிடித்த படம் ’மாயாபஜார்’, தமிழ்நாட்டில் பிடித்த இடம் ’மாயவரம்’ என கூறுகிறார்.

இப்படி கமல்ஹாசன், பிக்பாஸ் மாயாவை கிண்லடித்துள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த சீசனின் உண்மையான பிரதிபலிப்பு காட்டப்பட்டுள்ளதாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7ன் இறுதி நாள் இன்றாகும், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே இதன் போட்டியாளரான மாயாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்து வருவதாக சர்ச்சை இருந்து வருகிறது.

மற்ற போட்டியாளர்களுடன் அதிக வன்மத்தை காட்டினாலும் மாயாவை மட்டும் கமல்ஹாசன் கேள்வி கேட்பது இல்லை.இதையே மற்றவர்கள் செய்தால் பெரிதாக காட்டப்படுகிறது என்றெல்லாம் கமெண்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சி நிர்வாகமும், கமல்ஹாசனும் மாயாவுக்கு ஆதரவாக இருப்பதையே இது காட்டுகிறது எனவும் பேசப்படுகிறது.


 


 

From Around the web