சிவகார்த்திகேயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாழ்’ படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அருவி பட இயக்குநர் அருண் பிரபுவின் இரண்டாவது படமாக உருவாகியுள்ளது ‘வாழ்’. இதை சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். 

கடந்த ஓராண்டுக்கு முன்பே இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் செய்வது தள்ளிப்போனது. தொடர்ந்து இரண்டாவது அலை அதிகரித்தால் மேலும் படத்தின் வெளியீடு தாமதமானது.


தற்போது வெளியிடலாம் என்றாலும் இன்னும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் திறக்கப்படவில்லை. இதன்காரணமாக படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. அதன்படி புதியதாக தமிழில் களமிறங்கியுள்ள ‘சோனி லைவ்’ தளத்தில் வாழ் படம் வெளியாகிறது.

வரும் ஜூலை மாதம் 16-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படமாகும். முன்னதாக அவர் கனா, மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web