ஆபீஸ் தொடர் நடிகை மதுமிளா ஓப்பன் டாக்!

 
1

2013ம் ஆண்டு வெளியான ஆபீஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை மதுமிளா.இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்தார். பின் தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களில் நடித்து வந்தவர் விஷால் நடித்த பூஜை படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார்.

தொடர்ந்து ரோமியோ ஜுலியட், மாப்பிள்ளை சிங்கம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார். கனடாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு மதுமிலா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.அதில் தொகுப்பாளர் சினிமாவில் ஏன் இவ்வளவு பெரிய பிரேக் என்று ரசிகர்கள் பலரும் கேட்கிறார்கள், அதற்கு உங்களின் பதில் என்ன என்று கேட்கிறார். அதற்கு மதுமிலா, பிரேக் இல்லை Retired என்று தான் கூற வேண்டும், நான் சினிமாவில் நடிப்பதை முடித்துவிட்டு தான் திருமணம் செய்துகொண்டேன். எனது கணவருக்கு கனடாவில் தான் வேலை, அதனால் நான் அங்கேயே செட்டில் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை மதுமிளா. 

From Around the web