தலைவி பட ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்க்ள் அதிர்ச்சி..!!

 
தலைவி பட ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்க்ள் அதிர்ச்சி..!!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக தலைவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஏ.எல். விஜய் உருவாக்கியுள்ள படம் ‘தலைவி’. இந்த படம் இந்தி மற்றும் தமிழில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனால் நோய் தொற்றை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திரையங்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று உத்தரவின் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய படங்கள் வெளியீடுவதில் சிக்கில் எழுந்துள்ளது.

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து தலைவி படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மிகவும் கடினமாக காலக்கட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய படக்குழுவினருக்கு எங்களுடைய நன்றி. தலைவி படம் ஒரே நாளில் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. 


ஆனால் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமாக பரவி வரும் இந்த சூழலில், பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து தலைவி படத்தை வரும் 23-ம் தேதி வெளிவர திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்றை தடுக்க அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தலைவி படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது. தொடர்ந்து உன்களுடைய அன்பு எங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தலைவி படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த படம் மட்டுமில்லாமல் இம்மாதம் கோடை காலத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த பல்வேறு படங்களில் வெளியீடும் தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web