விரைவில் தயாராகும் தளபதி 68- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

சமீப நாட்களாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் படம் நடிக்கவுள்ளதாக பல்வேறு தகவல்கல் வைரலாக பரவி வந்தன. ஆனால் இதை இருவரும் உறுதி செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் சற்று எதிர்பாராதவிதமாக தளபதி 68 படம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி லியோ படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதை உறுதி செய்து அந்நிறுவனம் சிறப்பு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில், தற்காலிகமாக படத்துக்கு ”தளபதி 68” என்று படக்குழு பெயரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் மற்றும் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next… pic.twitter.com/iw1M5Dy7x9
— Vijay (@actorvijay) May 21, 2023
விரைவில் லியோ படத்தை முடிக்கவுள்ள விஜய், அடுத்ததாக 6 மாத காலம் ஓய்வெடுக்கவுள்ளார். அதற்கு பிறகு தான் தளபதி 68 படத்துக்கான பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு பிரபலங்கள் படக்குழுவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.