சென்னையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்திய அதிகாரிகள்..!

 
பிக்பாஸ் ஸ்டூடியோவுக்கு சீல்

விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் மலையாள பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடக்கும் ஸ்டூடியோவுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி நடந்து வருகிறது. மலையாளத்தில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான ஷூட்டிங் சென்னை ஈ.வி.பி ஃப்லிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்தது.

சமீபத்தில் இந்த படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வரும் மே 31-ம் தேதி முதல் தொலைக்காட்சி மற்றும் சினிமா சம்மந்தமான எந்த படப்பிடிப்பும் நடக்காது என ஃபெப்சி தொழிற்சங்கம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்ததாக கூறி மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரும் ஸ்டூடியோவை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று தயாரிப்பு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

அதை தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாத மலையாள ‘பிக்பாஸ்’ அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சியர் சம்பவ சம்பவத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஸ்டூடியோவை பூட்டி சீல் வைத்தனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த 7 நடிகர்கள் மற்றும் நடிகைகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கியிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து விரைவில் நிகழ்ச்சி தொடர்பாக தயாரிப்பு தரப்பிடம் இருந்து விளக்கம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web