‘ஓ மணப்பெண்ணே!’ டிரெய்லர் வெளியீடு!
Oct 14, 2021, 08:05 IST

கடந்த 2016-ம் ஆண்டு தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பெல்லி சூப்புலு. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இந்தப்படம் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. படத்திற்கு ஓ மணப்பெண்ணே என பெயரிடப்பட்டது. இப்படம் வரும் அக்டோபர் 22-ம் தேதி ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. டிரெய்லர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதால் இப்படம் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.