அடேங்கப்பா..!! இந்த வாரம் இத்தனை படங்கள் ஒடிடி-யில் வெளியாகிறதா ?

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'குடும்பஸ்தன்' இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது. ராஜேஷ்வர் காளிசுவாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது 'குடும்பஸ்தன்'. பலத்தரப்பில் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்த இப்படம் வசூலையும் குவித்தது. இந்நிலையில் 'குடும்பஸ்தன்' ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று 28 ஆம் தேதி ரிலீஸாகியது.
’பராரி’ என்ற படம் ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகியுள்ளது. விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் ரிலீசாகிறது. மேலும், ’பிளட் அண்டு பிளாக்’ என்ற படம் டென்ட்கொட்டாவிலும், சிம்ப்ளி சவுத் ஓடிடியில் ‘பியாண்ட் தி 7 சீஸ்’ என்ற படமும் வெளியாகிறது. அத்துடன் வெங்கடேஷின் 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படமும் ஜீ5 ஓடிடியில் வரும் மார்ச் 1 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதனையடுத்து அஜித்தின் 'விடாமுயற்சி' மார்ச் 3 ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே, திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் பலர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் 'விடாமுயற்சி' படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெளியான வெப்சீரிஸ்களில் பலரையும் கவர்ந்த தொடர் 'சுழல்'. புஷ்கர் - காயத்ரி கதையில் சஸ்பென்ஸ் திரில்லராக வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வேறலெவல் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'சுழல்' இரண்டாவது சீசன் அமேசான் ப்ரைம் தளத்தில் இன்று முதல் ஒளிப்பரப்பாகிறது.