அட பாவிங்களா... இப்படி கூட சொல்லுவீங்களா ? அது கருப்பு பணம் இல்ல நான் வெயிலில் நின்று கருத்த பணம்..!

 
1

குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் பாலா. தொடர்ந்த பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்த இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல்  உழைக்கும் பணத்தை வைத்து பல மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றார். அவ்வாறு சமீபத்தில் இளைஞன் ஒருவருக்கு பைக் வாங்கிக்கொடுத்து , கண் பார்வை அற்ற சிறுவனின் சிகிச்சைக்கு பணம் கொடுத்தது என பல விடயங்களை செய்து கலியுக கர்ணன் என பெயர் வாங்கியுள்ளார்.

இவ்வாறு இருக்கும் இவர் செய்யும் உதவிகளை விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவ்வாறே இவர் உதவி செய்யும் பணம் அனைத்தும் ஒரு சிலரின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே இவ்வாறு செய்கிறார் என கூறப்படுகின்றது. இது குறித்து  கேட்ட போது நான் எவர் பணத்தையும் எடுக்கவில்லை , இது கருப்பு பணம் இல்லை நான் வெயிலில் நின்று கருத்து சம்பாதித்த பணம் என விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர் நம்மளால் முடிந்தது சம்பாதிப்பது மட்டுமே. ஒரு சிலர் சொல்வதை போல என் பின்னால் யாருமில்லை. என் பின்னால் இருப்பது கஷ்டங்கள்,  வெட்கம், அடி,  வலி ஆகியவை மட்டும் தான். இதற்கடுத்து எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான் என்றும் கூறினார்.

 

From Around the web