சரி. தஞ்சைக்கு வருகிறேன்..!! வைரலாகும் ஆதித்ய கரிகாலன் ட்விட்டர் பதிவு..!!

 
1

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என ,மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 

பொன்னியின் செல்வன் நாவலை கல்கி சிலாகித்து எழுதியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அறிமுகமும் , அதில் கல்கியின் சொல்லாடலும் படிப்பவரை கதைக்குள் கொண்டு சென்று அலாதி கொள்ளச் செய்யும்.  அப்படிப்பட்ட மிகப்பெரிய பொக்கிஷமான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வருகிறார்.  

இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் ,வந்திய தேவனாக கார்த்தி ,அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி ,குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டையாக சரத்குமார், சின்னப்பழுவேட்டையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.   இரண்டு பாகமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ஆனது செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.  இந்நாளை சினிமா  ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தற்போது தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா" என குறிப்பிட்டுள்ளார்.


 

From Around the web