பிரபல சீரியலில் இருந்து திடீரென தூக்கப்பட்ட நடிகை..!!

விஜய் டிவி சீரியல்கள் தான் தற்போது டி.ஆர்.பி-யில் முன்னிலை பெற்று வருகின்றன. அதில் குறிப்பிட்ட தொடர் தான் காற்றுக்கென்ன வேலி. இதில் கர்நாடகாவைச் சேர்ந்த சுவாமிநாதன் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மதிய நேரங்களில் மக்கள் பார்க்கும் சீரியல்களில், இதற்கான பார்வையாளர்கள் வட்டம் சற்று அதிகமாக உள்ளது. இந்த தொடரில் மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுஜாதா. இவர் தற்போது சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகையான வீனா வெங்கடேஷ் என்பவர் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். முன்னதாக இவர் தான் மீனாட்சியாக நடித்து வந்தார். ஆனால் சீரியலில் இருந்து இவர் வெளியேறியதும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சுஜாதா வந்தார்.
தற்போது அவரும் வெளியேறி மீண்டும் மீனாட்சியாக வீனா வெங்கடேஷ் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திர மாற்றங்களால் தொடர்ந்து சீரியலை பார்க்கும் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் பலர் வெளியேறிவருவது குறிப்பிடத்தக்கது.