தனுஷ், கார்த்தி படங்களுடன் திரையிடப்படும் பழைய எம்.ஜி.ஆர் படங்கள்..!

 
தனுஷ், கார்த்தி படங்களுடன் திரையிடப்படும் பழைய எம்.ஜி.ஆர் படங்கள்..!

தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஏற்கனவே வெளியாகியுள்ள கர்ணன், சுல்தான், பழைய எம்.ஜி.ஆர் படங்கள் மற்றும் மொழிமாற்ற படங்களை தொடர்ந்து திரையிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் புதிய படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுள்ள கர்ணன், சுல்தான் படங்களுடன் எம்ஜிஆர் நடித்துள்ள பழைய படங்கள் மற்றும் மொழிமாற்று படங்களை தொடர்ந்து திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக வரும் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் படம் ஏப்ரல் 23-ம் தேதியும் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற படம் வரும் ஏப்ரல் 30-ம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படம் மே- 13-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது அரசின் புதிய உத்தரவின் காரணமாக மேற்கண்ட படங்களின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். விரைவில் கொரோனா பிரச்னை தீர்க்கப்பட்ட மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. 

From Around the web