’ஓமணப்பெண்ணே’ ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

 
ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானிசங்கர்

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஓமணப்பெண்ணே’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘பெல்லி சூப்புலு’. இந்த படத்தை தமிழ் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு விஷ்ணு விஷால், தமன்னாவை படக்குழு ஒப்பந்தம் செய்தது.

ஆனால் மிகவும் சிறிய பட்ஜெட்டில் கணக்கிடப்பட்ட இந்த படத்தின் மதிப்பு நடிகர்களின் தேர்வால் மேலும் அதிகரித்தது. இதனால் வளர்ந்து வரும் நடிகர்களை படத்தில் நடிக்கவைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி கதாநாயகனாக ஹரீஷ் கல்யாண் மற்றும் கதாநாயகியாக ப்ரியா பவானிசங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படத்துக்கு ‘ஓமணப்பெண்ணே’ என்று தலைப்பிடப்பட்டது. அறிமுக இயக்குநர் கார்த்தி சுந்தர் படத்தை இயக்கினார்.

படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீஸ் செய்ய திட்டமிட்ட போது, கொரோனா பிரச்னை எழுந்தது. இதனால் இரண்டாம் அலை பரவலின் போதே, ‘ஓமணப்பெண்ணே’ படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துவிட்டது.

நீண்ட காத்திருப்புக்கு பிறகு தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாட் ஸ்டாரில் வரும் அக்டோபர் 22-ம் தேதி ஓமணப்பெண்ணே படம் வெளியாகிறது. முன்னதாக ஹரீஷ் நடித்த ‘கசட தபற’ படமும் ஓ.டி.டி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

From Around the web