இந்த படத்தில் முதல் நாளே பேண்ட் இல்லாமல் நின்றேன்..!

 
1

சேவல் என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை பூனம் பஜ்வா. இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடித்திருந்தார்.தெனாவெட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்தார்.அதை தொடர்ந்து துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் பூனம் பஜ்வா நடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் முதல் நாள் படப்பிடிப்பில் சந்தித்த துயரம் குறித்து பேட்டி அளித்து இருந்தார். அவர் கூறுகையில், “ கோலிவுட்டில் இருந்து விலகுவது என்பது நான் முன்பே முடிவு செய்து அல்லது யோசித்த ஒன்று அல்ல. ரோமியோ ஜூலியட் படத்தின் திரைக்கதை மற்றும் நடிகர்கள் விவரம் தெரிந்ததும், இது நல்ல படமாக இருக்கும் என்று உணர்ந்தேன். நான் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதால் அதை செய்ய முடிவு செய்கிறேன். என்னுடையது மிகவும் தைரியமான, டாம் பாய்ஷ் பெண் கேரக்டர். அந்த கேரக்டரில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடித்தேன்.

மேலும் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறோமே என்ற எண்ணம் வராததால் தான் தனது கேரக்டரில் நடித்தேன். எனது கதாபாத்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காட்சிகள் உள்ளன. நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பது வீண் போகாது. எனது இன்னிங்ஸை மீண்டும் தொடங்க சரியான படமாக அமைந்தது. தமிழில் ஒரு படம் செய்து கொஞ்ச நாள் ஆகிறது.

நான் பெரும்பாலான படக்குழுவினரை முதல் முறையாக சந்தித்த தருணம் நன்றாக நியாபகம் இருக்கிறது. முதல் நாள் வெள்ளை சட்டை மட்டுமே அணிய வேண்டியிருந்தது. பேன்ட் எதுவும் இல்லை. இது எனக்கு மிகவும் அறிமுகமில்லாத ஒன்று. கொஞ்சம் கூச்சமாக தான் இருந்தது" என்றார்.

 

From Around the web