ஒரு காலத்தில் உணவகத்தில் வேலை... இன்று பான் இந்தியா நடிகர்..!

 
1

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தான் நடித்த முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரிஷப். கேஜிஎஃப் என்ற வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

முதலில் இத்திரைப்படம் கன்னடத்தில் வெளியானது. அந்த மொழியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, காந்தாரா தமிழ் தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வௌியிடப்பட்டது. இந்தியா முழுவதும் வரவேற்பும் கிடைத்தது. இப்படத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டது. தற்போது காந்தாரா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தனது திரைவாழ்வு தொடங்கியது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருப்பார். அதில், பள்ளிப்பருவம் முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்ததாகவும், நாடகத்தில் நடித்திருப்பதாகவும் கூறினார். மேலும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக, தண்ணீர் கேன் போடுவது, ஓட்டலில் வேலை செய்வது என அனைத்து வேலைகளையும் நான் செய்து சிறுக சிறுக பணம் சேமித்து சினிமாவுக்கு வந்ததாக கூறினார்

From Around the web