த்ரிஷ்யம் 2 படத்திற்கு மேலும் ஒரு மகுடம்..!

 
த்ரிஷ்யம் 2 படக்குழு

கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஐஎம்டிபி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

உலகளவில் வெளியாகும் படங்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதில் அந்தாண்டில் வெளியான படங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான மலையாளப் படமான த்ரிஷயம் இந்தாண்டுக்கான பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் பெருவாரியாக 8.8 புள்ளிகளை இந்த படம் பெற்றுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான த்ரிஷ்யம் முதல் பாகம் படத்தின் தொடர் பாகமாக இப்படம் வெளியானது. இதுவரை இந்தியாவில் வெளியான பார்ட் 2 படங்கள் வெற்றி அடையாது என்கிற பேச்சை இந்த படம் அடித்துக் நொறுக்கியது.

மலையாளத்தில் வெற்றிப் பெற்றது மட்டுமில்லாமல் உடனடியாக தெலுங்கிலும் த்ரிஷ்யம் 2 தயாராகியுள்ளது. அதையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கியுள்ளார். மலையாள த்ரிஷயம் 2 ஐஎம்டிபி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web