அச்சச்சோ..! 480 ஷாட்கள் காணவில்லை... அதிர்ச்சி தகவல் பகிர்ந்த இயக்குனர் பி.வாசு..!
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ள படம் சந்திரமுகி 2. சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் ராஜாவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார்.
சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் ஓராண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வந்தது.இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் சிஜி எஃபெக்ட்ஸ் பணிகள் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 28ந் தேதி படம் வெளியாக உள்ளது. இதையடுத்து, சந்திரமுகி 2 படத்தின் 2வது டிரைலரை படக்குழு வெளியிட்டது.
அதில்,17 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணு கங்கா, தன்னைத் தானே சந்திரமுகியா நெனைச்சுட்டு அந்த ஆட்டம் ஆடுச்சு. இப்போ ஒரிஜினல் பீஸே வந்து இறங்கியிருக்கு. என்ன ஆட்டம் ஆடப்போகுதோ.. என்ற வடிவேலு வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது.
இந்நிலையில், சந்திமுகி2 படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர்15ல் இருந்து 28ம் தேதிக்கு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து பி.வாசு வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் படத்தின் ஃபைனல் காப்பியை பார்த்தேன், அப்போது, அதில் இருந்த 480 ஷாட்கள் காணவில்லை, கிட்டத்தட்ட 5 நாட்கள் தீவிரமாக தேடி பின் அந்த காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான், சந்திரமுகி 2 படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாததற்கு காரணம் என இயக்குநர் பி வாசு விளக்கம் கொடுத்துள்ளார்.
#PVasu: A week before the release, 480 shots of the movie got deleted 🤯, causing a delay in #Chandramukhi2 & he claims it's not due to a clash with another big film!!!
— KARTHIK DP (@dp_karthik) September 24, 2023
pic.twitter.com/aNklI9n9CK