பிரகாஷ் ராஜுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!

 
பிரகாஷ் ராஜ்

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தெலுங்கர் அல்லாதவர்கள் போட்டியிடக்கூடாது என பிரபல நடிகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்த விவகாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் இயங்கு வரும் தெலுங்கு நடிகர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் விரைவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக நடிகர் பிரகாஷ்ராஜ் சார்பில் ஒரு அணியும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் மோகன்பாபுவின் விஷ்ணு மஞ்சு சார்பில் மற்றொரு அணியும் களமிறங்கியுள்ளன. இதனால் தெலுங்கு சினிமா நடிகர் சங்க தேர்தல் அங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சு அணிக்கு ஆதரவு தெரிவித்து பேசிய நடிகர் கோட்டா சீனிவாசராவ், தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தில் போட்டியிடுபவர்கள் தெலுங்கர்களாக இருக்க வேண்டும். பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் தான் நிர்வாகிகளாக வேண்டும் என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரகாஷ் ராஜ் வரவுக்கு பிறகு, கோட்டா சீனிவாசராவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. மேலும் பிரகாஷ் ராஜ் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெரியளவில் சென்றுவிட்டார். கோட்டா சீனிவாசராவுக்கு வாய்ப்புகள் வருவது குறைந்துபோனது. அந்த மனநிலையில் பிராகாஷ் ராஜ் தெலுங்கர் கிடையாது என்பதை மறைமுகமாக பேசுவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 

From Around the web