Oscars 2023 Highlights: 95வது ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்- இதோ..!!

உலகளவிலுள்ள சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 95 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் இருந்து ஆர்.ஆர்.ஆர், THE ELEPHANT WHISPERES, ALL THAT BREATHES ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டன.
அதன்படி சிறந்த பாடலுக்கான பிரிவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு...நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. படத்துக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் விருதை பெற்றுக்கொண்டனர். மேலும், சிறந்த ஆவண குறும்படத்துக்கான பிரிவில் THE ELEPHANT WHISPERES படம் விருதை தட்டிச் சென்றது. அந்த விருதை பெற்றுக்கொண்ட பட இயக்குநர் கார்த்திகி, இயற்கையுடன் இணைந்து வாழ்வது தான் மனிதம். புனிதமான பழங்குடி ஞானத்தைப் பகிர்ந்து கொண்டதற்காக யானை பராமரிப்பாளர்கள் பொம்மனுக்கும் பெள்ளிக்கும் நன்றி கூறுவதாக பேசினார்.
Brendan Fraser accepts the Best Actor Oscar for his incredible performance in 'The Whale' #Oscars #Oscars95 pic.twitter.com/ofuc00ckv3
— The Academy (@TheAcademy) March 13, 2023
Your 95th Oscars Best Picture Winner - 'Everything Everywhere All At Once' #Oscars #Oscars95 pic.twitter.com/fYo6J1eLKv
— The Academy (@TheAcademy) March 13, 2023
மேலும் All Quiet on the Western Front என்கிற படம் நான்கு பிரிவுகளிலும், தி வேல் திரைப்படம் 2 பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதுகளை வென்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்துக்கு ஒரு விருது மட்டுமே கிடைத்தது. இம்முறை விருது வென்ற பலரும் ஆஸ்கார் விருது வென்ற முதல் நபராக உள்ளனர்.
95வது ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்:
- சிறந்த நடிகை: மிச்செல் யோ (எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
- சிறந்த நடிகர்: பிரெண்டன் ஃப்ரேசர் (தி வேல்)
- சிறந்த துணை நடிகை: ஜேமி லீ கர்டிஸ் (எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
- சிறந்த துணை நடிகர்: கே ஹுய் குவான் (எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
- சிறந்த இயக்குனர்: டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
- சிறந்த அனிமேஷன் திரைப்படம்: "கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ" - கில்லர்மோ டெல் டோரோ, மார்க் குஸ்டாஃப்சன், கேரி உங்கர் மற்றும் அலெக்ஸ் புல்க்லி
- சிறந்த ஒளிப்பதிவு: ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் - ஜேம்ஸ் ஃப்ரெண்ட்
- ஆடை வடிவமைப்பு: பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் - ரூத் கார்ட்டர்
- அசல் திரைக்கதை: எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்
- அனிமேஷன் குறும்படம்: ஆன் ஐரிஷ் குட்பாய்
- சிறந்த அனிமேஷ் படம்: கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ
- சிறந்த ஆவணப்படம்: நவல்னி
- சிறந்த ஆவணப்பட குறும்படம்: தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
- சிறந்த சர்வதேச திரைப்படம்: ஆல் சைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (ஜெர்மனி)
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஆல் குவைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் .
- சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: அவதார்: தி வே ஆஃப் வாட்டர்.
"Do you know Naatu? Because if not, you're about to."
— LetsCinema (@letscinema) March 13, 2023
- Queen Deepika Padukone announces ‘Naatu Naatu’ live performance at the #Oscars
pic.twitter.com/T6q2ZGKTO0
பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கான அறிமுகம் மற்றும் அந்த படத்தில் இடபெற்றிருந்த ‘நாட்டு...நாட்டு..’ பாடலுக்கான அரங்கேற்றம் உள்ளிட்டவற்றை இந்தி சினிமா நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.