நெஞ்சம் மறப்பதில்லை ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
நெஞ்சம் மறப்பதில்லை ஓ.டி.டி. ரிலீஸ்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்னும் சில நாட்களின் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு தயாரான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜீனா கஸாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் தயாரிப்பு தரப்பினரிடையே இருந்த பிரச்னை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது.

இந்நிலையில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மார்ச் 5-ம் தேதி திரையரங்குகளில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியானது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இந்த படத்திற்கு கிடைத்தது.


செல்வராகவனின் இயக்கம், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு என பல்வேறு அம்சங்களில் இந்த படம் கவனமீர்த்தது. நீண்ட நாட்களாக செல்வராகவன் இயக்கும் படங்களை பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இது போனஸ் ட்ரீட்டாக அமைந்தது.

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு உருவானது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ள சூழலில், இந்த படத்தை ஓ.டி.டி-யில் எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் படக்குழுவிடம் இருந்து எவ்வித அப்டேட்டும் கிடைக்கப்படவில்லை.

இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு வரும் மே 14-ம் தேதி  ரம்ஜானை முன்னிட்டு ஜீ5 ஓ.டி.டி தளத்தில் நெஞ்சம் மறப்பத்தில்லை படம் வெளியாகவுள்ளது. திரையரங்கில் சென்று படம் பார்க்க முடியாத ரசிகர்கள், இந்த ஓ.டி.டி வரவை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 
 

From Around the web