லால் சலாம் படத்தை வாங்க ஓடிடி தளங்கள் ஆர்வம்..!

 
1

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி வேடங்களில் நடித்த படம் லால் சலாம். இதில் மொய்தீன் பாய் ரோலில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது.

ரஜினி நடித்திருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் படம் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு முதல் நாள் முதல் காட்சியே சில திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியது.

இந்நிலையில், படத்திற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததால் படத்தை வாங்க எந்தவொரு ஓடிடி நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், படத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கிவிட்டதாகவும், வரும் மார்ச் மாதம் அதன் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

From Around the web