‘அடியே’ படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! 

 
1

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான ‘அடியே’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியானது.

நிஜ உலகில் ஜிவி பிரகாஷின் ஒருதலை காதல் கை கூடாத நிலையில் வேதனையுடன் அவர் மாற்று உலகிற்கு செல்வதாகவும், அங்கும் நிஜ உலகம் போல் காதல் ஏற்படுவதாகவும் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. நிஜ உலகம் மற்றும் மாற்று உலகம் என மாறி மாறி ஜிவி பிரகாஷ் பயணிக்கும் கதையை குழப்பாமல் இயக்கிய இயக்குனருக்கு ஊடகங்களின் பாராட்டு கிடைத்தது.

இந்த நிலையில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘அடியே’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்கங்களில் இந்த படத்தை மிஸ் செய்தவர்கள் வரும் 29ஆம் தேதி முதல் சோனி ஓடிடியில் பார்க்கலாம்.


 

From Around the web