போர் தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்..!
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/57366a9bd87fe20053a8987dbf81d69e.jpg)
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் தரமான மேக்கிங்கில் புதிய அனுபவத்தை கொடுத்தது போர் தொழில் திரைப்படம்…அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு, நிகிலா விமல் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கடந்த 9ம் தேதி ரிலீஸான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது இன்றும் பல காட்சிகளுடன் திரையரங்கில் இந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது இதுவே இந்த படத்தின் வெற்றியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் 20 கோடி பட்ஜெட்டுக்குள் உருவான போர் தொழில் இதுவரை 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் சூப்பரான கலக்ஷனுடன் மாஸ் காட்டியுள்ளது.துணிவு படத்தை விட இது அதிகம் எனவும் கூறப்பட்டு வருகிறது…அதேபோல இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வந்தது.இப்போதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போர் தொழில் திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது..வந்தால் அதிலும் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது..
Most awaited #PorThozhil expected to stream from Aug 4 on SONY LIV. pic.twitter.com/bUnTt42NTa
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 27, 2023