குக் வித் கோமாளி குறித்து கண்ணீர் விட்ட ஓட்டேரி சிவா.

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நான்காவது சீசனில் கோமாளிகளில் ஒருவராக இடம் பெற்று இருந்தார் ஓட்டேரி சிவா. ஆனால் அவர் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

குடிபோதையில் செட்டிற்கு வந்ததால், அவரை கட்டுப்படுத்துவது கடினமான விஷயமாக இருப்பதால் அவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து விஜய் டிவி நீக்கியதாக சொல்லப்பட்டது. அதற்கேற்றாற் போல் இரண்டாவது வாரத்தில் சனிக்கிழமை எபிசோடில் ரக்ஷன் ஓட்டேரி சிவா அபாயகரமாக சமைத்ததால் அவர் கெஸ்ட் கோமாளியாக மாற்றப்பட்டதாக கூறினார்‌. அவருக்கு பதிலாக தங்கதுரை களமிறக்கப்பட்டுள்ளார்.

1

இப்படியான நிலையில் ஓட்டேரி சிவா பேட்டி ஒன்றில் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்து நிறைய சம்பாதிக்கிறேன் என்ற பொறாமையில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள். நான் எப்போதும் குடிக்க மாட்டேன். சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன். மேலும் என்னை நிகழ்ச்சியில் இருந்து தூக்கவில்லை விரைவில் கூப்பிடுகிறோம் என்று தான் சொல்லியிருக்கிறார்கள் என கண்ணீருடன் பேசியுள்ளார்.

From Around the web