மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் நம்ம லேடி சூப்பர் ஸ்டார்- இதுவேற லெவல் அப்டேட்..!
Jul 6, 2021, 22:03 IST
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா முதன்முறையாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கொடிகட்டி பறக்கும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தயாராகும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் த்ரிவிக்ரம் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழில் அண்ணாத்த, மேலும் இரண்டு புதிய படங்கள், மலையாளத்தில் பாட்டு என பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, மகேஷ் பாபுவுக்காக இப்படத்தில் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 - cini express.jpg)